Monday 20 July 2015

மலை கிராமத்திலிருந்து முதல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று தமிழக அளவில் 4-வது இடம் மாணவர்

திண்டுக்கல் மலைகிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், முதன் முறையாக ..எஸ். தேர்வில் வெற்றிபெற்ற தமிழக அளவில் 4-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆடலூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் டி.செல்வராஜ். இவர் ராஜபாளையம் அருகே கிருஷ் ணாபுரம் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகன் டி.எஸ்.விவேகானந்தன். இவர், IAS Civil Services Exam (ஐஏஎஸ் தேர்வில்) அகில இந்திய அளவில் 39-வது இடத் தையும், தமிழக அளவில் 4-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகிராமத்தைச் சேர்ந்த மாணவர் ..எஸ். தேர்வில் வெற்றிபெறுவது இதுவே முதன்முறையாகும்.
டி.எஸ். விவேகானந்தன், ராஜபாளையத்தில் பள்ளிப் படிப்பையும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும் முடித்துள்ளார். பின்னர், சிவகாசி தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 2012-ம் ஆண்டில் நடந்த யூனியன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, 229-வது இடம் பிடித்து வருமான வரித்துறை உதவி ஆணையராக புதுடெல்லியில் பணியாற்றி வந்தார். தொடர்ந்து யூனியன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய டி.எஸ்.விவேகானந்தன், தற்போது .எஸ்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இவரது மனைவி ரோசஸ் சுகன்யா IPS .எப்.எஸ். அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வருகிறார்--சரவணக்குமார் வே (கிராமத்து இளைஞன்).

No comments:

Post a Comment